Chillendra Chillendra - From "Thirumanam Enum Nikkah"

யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றினில் சிறகை விரித்தேனே
மெஹெந்தி வரைந்த வானிலே தேடி அலைந்தேனே

ஹமாரே திலோங்கா ஹே கெஹனா
நேசத்தின் சாரல்கள் தூவ தூவ
தேறி பியாரி அதாயே தேரா பான்க்
பன்கியா பாத் ஹே வல்லா
வானில் உதிர்ந்த இறகொன்று காற்றின்
கண்ணங்களில் கவிதை எழுதியதே

சில்லென்ற சில்லென்ற காற்றினில் சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேனே தேடி அலைந்தேனே ஒ

யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா

கர்தே சே துனியா ஸ்
சுற்றிடும் உலகம் சுழலும் ஓசை காதில் கேட்குமா
மௌனத்தின் வெளியில் ஓங்கார ஒலியும் ஆமினும் கேட்குமே
உன் மூச்சு நின்றாலும் உன்னைத்தான் நீங்காத சொந்தம் எது?
கண்மூடி போனாலும் உன்னோடு சாய்கின்ற நிழல் தானது

என்னைப்போல் பெண்ணொன்று அச்சாக இன்னொன்று
கண்டேனே நானின்று யாரென்று சொல்
தாயா? உன் சேயா?
நேசத்தை சொல்ல வார்த்தை வசப்படுமா

சில்லென்ற சில்லென்ற காற்றினில் சிறகை விரித்தேனே
மெஹெந்தி வரைந்த வானிலே பாடி பறந்தேனே

இருண்ட வானம் விண்மீன்கள் கூட்டம் வெண்ணிலா என்ன?
ஏழை ஒருவன் கந்தல் குடைபோல் தொலைந்த என் மணம்
மெல்லிய வெப்பத்தில் மேகத்தின் குளுர்ச்சியின் சலனம் தான் எது?
சட்டென்று தூவிடும் நட்பென்னும் பூமழை சாரலே அது

எல்லாமே நீயாக எண்ணத்தில் பூவாக சொல்லாத சொல்லொன்று என்னென்று சொல்
பாசமா நேசமா
மேஹபூபு மேரா ஹோகாத்து கபு சச்சுனா
வாழ்வே உன்னுடன் என்னுடன் இணைந்திட வா
இனியெல்லாம் நீதான் நீயே நான்தான்
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றினில் சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேனே பாடி பறந்தேனே

யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா



Credits
Writer(s): Mohamaad Ghibran, Munna Shaoukat Ali, Kadhal Mathi
Lyrics powered by www.musixmatch.com

Link