Anantha Kuyilin Pattu (Language: Tamil; Film: Kadalukku Mariadai; Film Artist 1: Vijay; Film Artist 2: Shalini)

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே

கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா
அது அன்பை விட தித்திப்பா

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே

பூமி எங்கும் கண்டதில்லை பாசத்தை உன் போலே
வேறெதுவும் தேவை இல்லை அன்புக்கு முன்னாலே
நெஞ்சுக்குள்ளே பூ மலரும் வீட்டுக்குள் வந்தாலே
நிம்மதியில் கண் மலரும் பாட்டுக்கள் தந்தாலே
இந்த சொந்தங்கள் போதுமே எங்கள் இன்பங்கள் கூடுமே
அன்பெனும் தீபம் ஏற்றிய வீடும் தெய்வத்தின் ஆலயம் தான்
வீடு என்றால் மோட்சம் என்றால் வீடு கண்டோம் நேசத்திலே

தக்கஞ்சுனு-தக்க-தாம்-தாம்
தத்தின-தஞ்சனு-தாம்
தக்கஞ்சுனு-தக்க-தாம்-தாம்
Silence (அடேங்கப்பா)
Skies are grey and cloudy
We are feeling blue
The skies are grey and cloudy and we are feeling blue
You come to us my sunlight and make our dreams come true
Love is always there with us together
Feelings are forever and forever

அன்பினிலே அன்பினிலே ஆலயம் கண்டேனே
அண்ணங்களின் கைகளிலே ஜீவனும் நான் தானே
பாசத்திலே வாசம் தரும் பூவனம் நீ தானே
நேசத்திலே ராகம் தரும் வீணையும் நீ தானே
சிலர் வேதம் பாடலாம் சிலர் கீதை தேடலாம்
நான் கண்ட வேதம் நான் கண்ட கீதம்
அண்ணனின் வார்த்தைகள் தான்
வானில் நிலா தேய்ந்திடலாம் பாச நிலா தேய்ந்திடுமோ

ஆனந்த குயிலின் பாட்டு
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று
தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே

கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா
அது அன்பை விட தித்திப்பா

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே



Credits
Writer(s): Ilaiyaraaja, Palani Bharathi Palaniappan
Lyrics powered by www.musixmatch.com

Link