Oru Manjakkuruvi - From "Ponnu Oorukku Pudhusu"

ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஹர ஹோய்... ஒரு உல்லாச கதைய சொல்லாம சொல்லி
பண்பாடுது என்ன கொண்டாடுது
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி

வெள்ளரிக்கா கொடி ஆட்டம்
ஒரு கன்னி பொண்ணு வெக்கத்துல தடுமாற
துள்ளி வரும் இளங் கன்றா
ஒரு சின்ன பையன் வெக்கத்துல விளையாட

இது ஒரு நாளில் முடிவான
புதுமை காதலிது
இனிக்கும் இளமை மோதல் இது
ஹர ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்

இளம் பருவத்திலே வந்த தேவதையே
நீ ஒரு வரம் தருவாயோ ஹோய்
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி

முன்னும் பின்னும் சரிவாக
சில வண்ணம் கொண்டு மின்னல் என வந்தாளே
எண்ணம் எங்கும் சுவையாக
என் சிந்தை கொள்ள விருந்தென நின்றாலே

இனி உறவாட தடையேது வளரும் மோகம்மடி
அணைப்பில் அடங்கும் தேகம்மடி
ஹர ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
தெருவோரத்திலே வந்த தேவதையே
நீ ஒரு வரம் தருவாயோ ஹோய்

ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஹர ஹோய் ஒரு உல்லாச கதைய சொல்லாம சொல்லி
பண்பாடுது என்ன கொண்டாடுது
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி
ஒரு மஞ்சகுருவி என் நெஞ்ச தழுவி



Credits
Writer(s): Panju Arunachalam, Ilaiyaraaja Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link