Poovizhi Vaasalalil - From "Deepam"

பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று
அழைக்குது எனையே

பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று
அழைக்குது எனையே

அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போராடுது
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே (ஆஹா)
இளம் கிளியே கிளியே (ஆஹா)
அங்கு வரவா தனியே (ஆஹா)
மெல்ல தொடவா கனியே (ஆஹா)
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று
அழைக்குது எனையே (ஆஹாஹா)

இள மாலைத் தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார் மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ ஓ...
எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளம் கிளியே கிளியே இங்கு வரலாம் தனியே
மெல்லத் தொடலாம் எனையே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று
அழைத்தது உனையே

கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ
கலை இது அறிமுகம் வேண்டுமோ
அசைந்தாடும் ஊஞ்சல் நாமாகவோ
நவரச நினைவுகள் தோன்றுமோ
பூமேனியோ மலர் மாளிகை
பொன் மாலையில் ஒரு நாழிகை
நாளும் நானாடவோ
அணைக்கும்
துடிக்கும்
சிலிர்க்கும் மேனி

பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே (ஆஹா)
இளம் கிளியே கிளியே (ஆஹா)
இங்கு வரலாம் தனியே (ஆஹா)
மெல்லத் தொடலாம் எனையே (ஆஹா)
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று
அழைத்தது உனையே (ஆஹா)



Credits
Writer(s): Kannadhasan, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link