Poonkatre Poonkatre Poovidam

பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறைகள் சொல்கிறது
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது
அடி பாரதி கண்ணம்மா மனம் கலங்குவதேனம்மா

பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

வெறும் கோயில் இங்கே ஏன்மா விளக்கேற்றினாய்
விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய்
விளையாத மண்ணில் ஏம்மா விதை தூவினாய்
வெயிற்கால கானல் நீரில் வலை வீசினாய்

அறியாமல் பிழை செய்தாய்
மணலாலே சிலை செய்தாய்
அடி பாரதி கண்ணம்மா இது பாழ்பட்ட மண்னம்மா

பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம்
வளையாடும் கைகள் தொட்டு விளையாடலாம்
இடைவேளை போலே இந்த பிரிவாகலாம்
இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம்

இளம்பூவே வருந்தாதே
உலகம் தான் திருந்தாதே
அடி பாரதி கண்ணம்மா நீ பாரத பெண்னம்மா

பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறைகள் சொல்கிறது
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது
அடி பாரதி கண்ணம்மா மனம் கலங்குவதேனம்மா



Credits
Writer(s): Deva, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link