Enaku Oru Annai

எனக்கொரு அன்னை வளர்த்தனள் என்னை
அவள் பெயர் மூகாம்பாள்
எனக்கொரு அன்னை வளர்த்தனள் என்னை
அவள் பெயர் மூகாம்பாள்

நான் அவள் பிள்ளை
துயர் எனக்கில்லை
காப்பாள் ஜகதாம்பாள் ஆ...

எனக்கொரு அன்னை வளர்த்தனள் என்னை
அவள் பெயர் மூகாம்பாள்

நான் மறந்தாலும் தான் மறவாத
உள்ளம் அன்னை உள்ளம்
நான் மறந்தாலும் தான் மறவாத
உள்ளம் அன்னை உள்ளம்

ஊன் உயிர் யாவும் உருகிட பாயும்
வெள்ளம் அன்பின் வெள்ளம்
ஊமையும் பேச உதவிய தேவி
ஊமையும் பேச உதவிய தேவி
தீமைகள் தீர்ப்பாள் சந்நிதி மேவி

எனக்கொரு அன்னை வளர்த்தனள் என்னை
அவள் பெயர் மூகாம்பாள்

ஆயிரம் வேஷம் ஆயிரம் கோஷம்
அதுதான் நாளும் இங்கே
ஆயிரம் வேஷம் ஆயிரம் கோஷம்
அதுதான் நாளும் இங்கே

ஆனந்த யோகம் அனுபவ ஞானம்
அடடா கண்டேன் அங்கே
இசையெனும் மாலை தொடுப்பதென் வேலை
இசையெனும் மாலை தொடுப்பதென் வேலை
நடப்பவை யாவும் நாயகி லீலை

எனக்கொரு அன்னை வளர்த்தனள் என்னை
அவள் பெயர் மூகாம்பாள்
நான் அவள் பிள்ளை
துயர் எனக்கில்லை
காப்பாள் ஜகதாம்பாள் ஆ...

எனக்கொரு அன்னை வளர்த்தனள் என்னை
அவள் பெயர் மூகாம்பாள்



Credits
Writer(s): Ilaiya Raaja, Valee
Lyrics powered by www.musixmatch.com

Link