Kathara Kathara

கதறக்கதறக் காதலிப்பேன்
சிறுகச் சிறுக சிறைபிடிப்பேன்
கதறக்கதறக் காதலிப்பேன்
சிறுகச்சிறுக சிறைபிடிப்பேன்
உன்னை கதறக்கதறக் காதலிப்பேன்
சிறுகச் சிறுக சிறைபிடிப்பேன்

யாணைக் காதில் எறும்பைப்போல்
காதல் மெல்ல நுழைந்திடுமே
காதல் வந்தால் பட்டாம்பூச்சி வானவில்லை விழுங்கிடுமே
துருத்துருப்பார்வையில் தூண்டிவிட்டாய்
நான் துடிக்கும் மீனாய் மாட்டிக்கொண்டேன்
துருத்துருப்பார்வையில் தூண்டிவிட்டாய்
நான் துடிக்கும் மீனாய் மாட்டிக்கொண்டேன்

கதறக்கதறக் காதலிப்பேன்
சிறுகச் சிறுக சிறைபிடிப்பேன்
உன்னை கதறக்கதறக் காதலிப்பேன்
சிறுகச்சிறுக சிறைபிடிப்பேன்

முதல் முதல் என்னைத்தொட்டவுடன்
ஒரு பறவையைப்போல் நான் பறந்துவிட்டேன்
இதயத்தைக் காதல் வருடியதும்
என் இடம் பொருள் ஏவல் மறந்துவிட்டேன்

என் மீசை உன் மூக்குக்குத் திருகாணி
என் மார்பினில் உன் முகம் மருதாணி
இதுவரை என்னைத் தொலைத்துவிட்டேன்
உன் இருவிழியாலே கிடைத்துவிட்டேன்
விதையென நெஞ்சில் விழுந்துவிட்டேன்
காதல் செடியாய் கொழுந்துவிட்டேன்
உலகம் முழுதும் பழசு
இனி நம் காதல் தான் புதுசு

கதறக்கதறக் காதலிப்பேன்
சிறுகச் சிறுக சிறைபிடிப்பேன்

கடைக்கண்ணாலேப் பார்த்தவுடன்
தலை கலங்கரை விளக்காய் சுழலுதடி
பதினெட்டு வயதை தீண்டியதும்
என் நரம்பினில் மின்னல் பாயுதடி

உன் கண்ணம் அழகிய நெடுஞ்சாலை
உன் முகப்பரு அதற்க்கொரு வேகத்தடை
முத்தம் என்னும் நாடகத்தில் முகத்தை முகத்தால் மூடலாம்
இரத்தம் எல்லாம் தீப்பிடிக்க ஆனந்தத்தாண்டவம் ஆடலாம்
இதுவரை சொன்னது உனக்கு
இனிமேல் சொல்லடி நீ எனக்கு

கதறக்கதறக் காதலிப்பேன்
சிறுகச் சிறுக சிறைபிடிப்பேன்
உன்னை கதறக்கதறக் காதலிப்பேன்
சிறுகச்சிறுக சிறைபிடிப்பேன்

யாணைக் காதில் எறும்பைப்போல்
காதல் மெல்ல நுழைந்திடுமே
காதல் வந்தால் பட்டாம்பூச்சி வானவில்லை விழுங்கிடுமே
துருத்துருப்பார்வையில் தூண்டிவிட்டாய்
நான் துடிக்கும் மீனாய் மாட்டிக்கொண்டேன்

கதறக்கதறக் காதலிப்பேன்
சிறுகச் சிறுக சிறைபிடிப்பேன்



Credits
Writer(s): Kabilan, Dhina
Lyrics powered by www.musixmatch.com

Link