Idho Idho En Pallavi

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
இவன் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ
இதோ இதோ என் பல்லவி

என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலா
நான் காணும் கோலமோ

என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ

பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ
இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ
இதோ இதோ என் பல்லவி

அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா

ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலாகினேன்
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக்கூடுமா

நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ

இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ

இதோ

ம்...

இதோ

ம்...

என் பல்லவி...

ம். ம். ம்.



Credits
Writer(s): Vairamuthu Thevar, Balasubrahmanyam P
Lyrics powered by www.musixmatch.com

Link