Uyire En Uyire

தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓஹோ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே

நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி
நீ என்னை பாரடி

இது வரை எங்கிருந்தாய் இதயமும் உன்னை கேக்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய் என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்
உனக்குள்ளே ஒளிந்திருந்தேன் உருவத்தில் உதிரமாய் கலந்து இருந்தேன்
உன்னை உனக்கே தெரியலலையா இன்னும் என்னை புரியலையா

நான் சிரித்து மகிழ்ந்து சிலிர்க்கும் வரங்கள் நீ கொடுத்தாய்
நான் நினைத்து நினைத்து ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய்
எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதட
ஓஹோ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
என் அருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே

நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி
நீ என்னை பாரடி

தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா

உன்னுடன் இருக்கையிலே நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா
உன்னுடன் நடக்கையிலே என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள் ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே

நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாச காற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்

நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி (ம்ம்ம்)
நடமாடும் பூச்செடி
நீ என்னை பாரடி

உயிரே என் உயிரே என்னவோ நடக்கிறதே
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்கிறதே
ஓஹோ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே

எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
நான் வாழ்ந்த ஞாபகம்
தாரா தாரா



Credits
Writer(s): Thamarai, Harris Jayaraj J
Lyrics powered by www.musixmatch.com

Link