Adadaa Ithuyenna

அடடா இது என்ன இது என்ன
எனக்கு ஒன்னும் புரியலையே புரியலையே
அடி எனக்கென்ன எனக்கென்ன
நடந்துச்சு தெரியலையே தெரியலையே
நிழலாக கிடந்தேன் நான்
நிசமாவே நிமிர்ந்தேன் நான்
உன்னப்பாத்து தொடுவானா ஒசந்தேன் நான்

அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புரியலையே புரியலையே

ஆசை அலை பாயுது பாயுது
ஆள போலி போடுது போடுது
ஏனோ ஒரு மாதிரி ஆகுதடி
தேகம் குடை சாயுது சாயுது
பார்வை பட காயுது காயுது
தானா உயிர் தீயில வேகுதடி

மோகம் ஒரு நாடம் போடுது வேணாம் அத பாக்காதே
சூடா பல செய்தியும் பேசுது நீயும் தலை ஆட்டாத

பச்ச மண்ண பத்தவச்சு போக்கு காட்டாத

அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புரியலையே புரியலையே

ஆசை மழை தூறுது தாறுது
ஊரே நெரம் மாறுது மாறுது
ஏதோ புது வாசனை பூக்குதடி
காதல் தலைக்கேறுது ஏறுது ஏறுது
நேரா சொகம் உருது உருது
ஜோரா அது வேலையக்காட்டுதடி

வார்த்தை ஏதும் பேசிட தோணல
வாறேன் உன் பின்னால
வேற ஒரு வார்த்தையை தேடிட
ஆகாது இனி என்னால

மொத்த ஜென்மம் ஓய்ஞ்சு போச்சே
ஒத்த பார்வையில

அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புரியலையே புரியலையே
நிழலாக கிடந்தேன் நான்
நிசமாவே நிமிர்ந்தேன் நான்
உன்னப்பாத்து தொடுவானா ஒசந்தேன் நான்

அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புரியலையே புரியலையே



Credits
Writer(s): D. Imman, Yuga Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link