Pona Usuru Vanthurichu

போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு

போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு
இது போல ஒரு நாளே வர வேணா இனி மேலே
நொடி கூட எட்டி இருக்காத
என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத

போன உசுரு வந்துருச்சு
உன்னவாரி அணைக்க சொல்லிருச்சு
இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிரிப்பேனே
ஹோ ஹோ ஹோ... ஹோ ஹோ... ஹா

சேர்ந்து இருக்கும் உள்ளத்துல
துணை யாரு நமக்கு வெள்ளத்துல
உயிர் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது

நடந்தாலே அது சுகந்தானே
துணையாக நானும் வருவேனே
சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே
ஆக மொத்தம் உன் பாரமெல்லாம் நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ

ஆடி அடங்கும் பூமியில நாம வாடி வதங்க தேவயில்ல
ஒருவாட்டி வரும் வாழ்க்கை துணிவோமே அத ஏற்க
சிரிப்போமே நந்த வனம் போல
அது போதும் இந்த உயிர் வாழ

போகும்வர இந்த காதல் நம்மகாக்கும்ண்ணு நினச்சா வெலகும் வேதன
போகயிலும் நாம ஒத்துமயா போகபோறோம் இதுதான் பெரிய சாதன
ஓஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ

போன உசுரு வந்துருச்சு
உன்னவாரி அணைக்க சொல்லிருச்சு
இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிரிப்பேனே

ம் ம் ம் ம்... ஹோ ஹோ ஹோ



Credits
Writer(s): D. Imman, Yuga Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link