Adi Aathaadi (feat. S Janaki)

அடி ஆத்தாடி.
அடி ஆத்தாடி... இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா.!
அடி அம்மாடி. ஒரு அலை வந்து
மனசில அடிக்குது அதுதானா.!

உயிரோடு...
உறவாடும்
ஒருகோடி...
ஆனந்தம்.!
இவன் மேகம் ஆக... யாரோ காரணம்.!

அடி ஆத்தாடி... இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா.!
அடி அம்மாடி.

மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ.!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ.!

இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை.!
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை.!

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ.!
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ.
இசை கேட்டாயோ...!

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்.!
உண்மை சொல்லு பெண்ணே -என்னை
என்ன செய்ய உத்தேசம்.!

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன.!
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன.!

கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே.!
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப் போனேனே.!
சொல் பொன்மானே...!

அடி ஆத்தாடி...
இளமனசொன்று இறக்கை கட்டிப்பறக்குது
சரிதானா.!
அடி அம்மாடி.
ஒரு அலை வந்து மனசில அடிக்குது
அது தானா.!
உயிரோடு...
உறவாடும்
ஒருகோடி...
ஆனந்தம்.!
இவன் மேகம் ஆக... யாரோ காரணம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Arunachalam Panchu
Lyrics powered by www.musixmatch.com

Link