Pooparikka Neeyum (From "Something Something Unakkum Enakkum")

பூப்பறிக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி தந்தானே தந்தானே
பொட்டு வைக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே
கண்ணாடி கைகள் நீட்டுமடி தந்தானே தந்தானே

கோயிலுக்கு நீயும் போகாதே
கோபுரங்கள் சாஞ்சி பாக்குமடி பாக்குமடி
காட்டுக்குள்ள நீயும் போகாதே
கொட்டுகிற தேனீக்கூட்டம் தேனெடுக்க உதட்டை சுத்துமடி

ஓஹோ ஹோ பூப்பறிக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி ஹோ

சூறாவளி போல போகிற இந்த இளமைய
யாராச்சும் தடுக்க முடியுமா
சுத்திச் சுத்தி ஆட்டம் போடுற இந்த வயசிடம்
யாராச்சும்நெருங்க முடியுமா ஹோ

ஹேய் க க க ரி க ரி ச ச ச நீ நீ ச
க க க ரி க ரி ச ச ஆ ஆ ஆ

ம்ம்ம் ஆத்துக்குள்ள நீ குளிச்சா
அங்க உள்ள மீனு எல்லாம்
மீசையத்தான் சுத்திக்கிட்டு அலையுதடி
ஆட்டுக்குட்டி கூட இப்ப தாடி ஒன்னு வச்சிக்கிட்டு
ஒரு தலைக் காதலுடன் திரியுதடி

குச்சுப்புடி கதகளியெல்லாம் உன் நடையிலே
புதுப் புது பாடம் படிக்குமே
ரங்கோலி கோலம் எதுக்கடி
கொஞ்சம் வெக்கப்படு
கன்னத்தில் வண்ணம் பிறக்குமே

நாடு விட்டு நாடு வரும் வேடந்தாங்கல் வெள்ளைப் புறா
யார் மனதில் கூடு கட்ட வருகிறதோ
கால் முளச்ச சூரியனா தூள் கெளப்பி சுத்துறியே
உன்னிடத்தில் எந்த நிலா ஒளி பெறுமோ

வட்டமிடும் பட்டாம்பூச்சியே உன் வண்ணமெல்லாம்
ஒட்டிக்கொள்ள பூவும் பூத்திருக்கு
திட்டம் இல்ல திசையும் இல்லையே
உன் வாலிபம் பறந்திடத் தடையும் எங்கிருக்கு



Credits
Writer(s): Na. Muthukumar, Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link