Inni Naanum Naan Illai

இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடி சொல்லடி
முன்போல நான் இல்லை
முகம் கூட எனதில்லை
ஏனடி ஏனடி

நானும் நீயும்
ஏனோ இன்னும்
வேறு வேறாய்
தூரம் என்ற சொல்லை
தூக்கில் போட்டு கொல்ல
நீ வாராய்
புரையேரும்போதேல்லாம்
தனியாக சிரிக்கின்றேன்
அது ஏனடி
இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடா சொல்லடா
முன்போல நான் இல்லை
முகம் கூட எனதில்லை
ஏனடா ஏனடா

உனது கன்னத்தின்
குழியினில் கட்டில் போட்டேனோ
படுத்துக்கொள்ள விரும்பியதும்
சிரித்தாய்
நான் விழுந்தேன்

கையில் கெடிகாரம்
இருந்தபோதும் என்னை
மணி கேட்டதில் அட
நான் விழுந்தேன்

ஒரு வார்த்தை பேசாமல்
புருவத்தை நீ தூக்கி
ஒரு பார்வை பார்த்தாயே
அதில்தானே நான் விழுந்தேன்

என் பிறந்தநாள் வாழ்த்தை
சொல்லவே நீயும்
நள்ளிரவில் பரிசொடு
சுவரேறி குதித்தாயே
அப்போது நான் விழுந்தேன்

எப்போது நினைத்தாலும்
அப்போது பூ தோன்றும்
அன்பே

எங்கும் போகாமல்
மனிதர்கள் முகத்தை பாராமல்
வருடும் முழுதும்
விடுமுறை என்று எண்ணி கொள்வோமா

போதும் போதாத
ஆடை நீ அணிய
பார்த்தும் பாராதவன்
போல் ரசிப்பேன்

பசித்தாலும் உண்ணாமல்
தொலைபேசி மணி ஓசை
அழைத்தாலும் நகராமல்
சோம்பேறி போல் நாமும்

பசித்தாலும் உண்ணாமல்
தொலைபேசி மணி ஓசை
அழைத்தாலும் நகராமல்
சோம்பேறி போல் நாமும்
சில நாட்கள் வாழ்வோமா

தினம்தோறும் சில ஊடல்
தித்திக்கும் ஒரு தேடல்
நிகழும்
இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடா சொல்லடா
முன்போல நான் இல்லை
முகம் கூட எனதில்லை
ஏனடா ஏனடா
நானும் நீயும்
ஏனோ இன்னும்
வேறு வேறாய்
தூரம் என்ற சொல்லை
தூக்கில் போட்டு கொல்ல
நீ வாராய்
புரையேரும்போதேல்லாம்
தனியாக சிரிக்கின்றேன்
அது ஏனடா



Credits
Writer(s): Srinivas, Vasanth
Lyrics powered by www.musixmatch.com

Link