Kadhal Vandhucho

ஒரு காதல் வந்துச்சோ... ஓஒ
ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ... ஓஒ
ஒரு காதல் வந்துச்சோ

என்னை நானே மெல்ல கொஞ்சிக் கொள்ளவும்
முத்தம் தந்து இரு கன்னம் கிள்ளவும்
அச்சோ அச்சோ என்று ரொம்ப தோணுதே
அச்சோ அச்சோ ஏனோ ஆசை கூடுதே

எண்ணத்தில் சடுகுடுகுடுவென
நெஞ்சத்தில் படபடபடவென
ஆசை வந்து கொத்திச்சோ
எண்ணத்தில் சடுகுடுகுடுவென
நெஞ்சத்தில் படபடபடவென
ஆசை வந்து கொத்திச்சோ

ஒரு காதல் வந்துச்சோ... ஓஒ
ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ... ஓஒ
ஒரு காதல் வந்துச்சோ

தித்தோம் தக தாதி தத்தோம்
தக தாதி தத்தோம்
தித்தோம் தக தாதி தத்தோம்
தித்தோம் தக தாதி தத்தோம்
தக தாதி தத்தோம்
தித்தோம் தக தாதி தத்தோம்

கொஞ்சும் வெயிலும் உண்டு
கொட்டுகின்ற பனி உண்டு
ரெண்டும் நெருங்கி பழக
இன்று பொழியும் மழை
சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
மண்ணில் சிதறி விழுக

மேகங்கள் சந்தித்து ஊர் வம்பு பேசிட
விண்மீன்கள் கோவித்து ஆங்காங்கே அழுதிட
பழைய நிறங்களில் புதிய மலர்கள்
புதிய இசையில் பழைய குயில்கள்
வானவில்லை தின்று வசந்தமாகி நின்றேன்

ஓ இது காதல் காலமடி என் சகியே
இது காதல் காலமடி
நெஞ்சுக்குள் எங்கேயோ
கேட்கின்ற ராகத்தில் ரகசிய ஆலாபனை
இது காதல் காலமடி என் சகியே
இது காதல் காலமடி

ஒரு காதல் வந்துச்சோ... ஓஒ
ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ... ஓஒ
ஒரு காதல் வந்துச்சோ

மெல்ல நகர்ந்து வரும் சூரியனும்
ஓடி சென்று கடலின் மடியில் விழுமே
ஏதோ எடுக்கவென ஓடி வரும் வெள்ளலைகள்
மெல்ல திரும்பி செல்லுமே

பூ தாங்கும் பாரத்தில் காம்பொன்று சாய்ந்திட
சட்டென்று கை நீட்டி இலை ஒன்று தாங்கிட
குளத்து நீரிலே தலையை தூக்கும்
இளைய கமலம் சிரித்து தீர்க்கும்
யாருக்காக மலர்ந்த கவிதை அலை சேர்க்கும்

இது காதல் காலமடி காலமடி
இது காதல் காலமடி என் சகியே
இது காதல் காலமடி

முகமெல்லாம் கால் உண்டு
நெஞ்சுக்குள்தான் வந்து கதக்களி செய்கின்றதே... ஏ...
ஓ இது காதல் காலமடி
இது காதல் காலமடி என் சகியே
இது காதல் காலமடி

ஒரு காதல் வந்துச்சோ... ஓஒ
ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ... ஓஒ
ஒரு காதல் வந்துச்சோ

எண்ணத்தில் சடுகுடுகுடுவென
நெஞ்சத்தில் படபடபடவென
ஆசை வந்து கொத்திச்சோ

ஒரு காதல் வந்துச்சோ... ஓஒ
ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ... ஓஒ
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ



Credits
Writer(s): Vasanth, Ragav Raja
Lyrics powered by www.musixmatch.com

Link