Manjal Veyil

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக் கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே...

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக் கொண்டு வந்தாய்

உலகத்தின் கடைசி நாள்
இன்று தானோ என்பதுபோல்
பேசி பேசி தீர்த்தபின்னும்
எதோ ஒன்று குறையுதே...

உள்ளே ஒரு சின்னஞ்சிறு
மரகத மாற்றம் வந்து
குறு குறு மின்னல்யென
குறுக்கே ஓடுதே...

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக் கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர்
நடக்கிறார் நடக்கிறார்
மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்து பெய்து மழை
நனைகிறார் நனைகிறார்

யாரோ யாரோ யாரோ அவள்
ஹேய் யாரோ யாரோ யாரோ அவன்
ஒரு காதும் காதும் வெட்டிக்கொள்ள
இரு தண்டவாளம் ஒட்டி செல்ல

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக் கொண்டு வந்தாய்

இன்னும் கொஞ்சம் நீளவேனும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி
நெஞ்சோரம் பனித்துளி

நின்றுப்பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருந்தேனே
நிற்கவைத்தாள் பேசவைத்தாள்
நெஞ்சோரம் பனித்துளி...



Credits
Writer(s): Harris Jayaraj J, Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link