Idho Thaanaagave (From "Adhe Kangal")

இதோ தானாகவே
ஏனோ நீயாகிறேன்?
விழிக் காணாமலே
உனைப் போல் ஆகிறேன்

இலை வண்ணமாய் மின்னுதே
எனைச் செல்லமாய் கொல்லுதே
காதல் காதல் தூண்டுதே
பார்வைக் கண்கள் மீளுதே
ஆதவப் பூவோ, மாதவப் பூவோ?
உறவா, பகையோ?

காதல் எந்தன் விழிகள் ஆகி
அழகே உன்னைப் பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னைச் சேர்க்குதடி

அட காற்று என்னும் குதிரை ஏறி
இதயம் மாயம் ஆகுதடி
அடி ஆசையில்
உன்னை திருடிச் செல்ல
களவும் நியாயம் ஆகுமடி

முற்றும் துறந்தவள், மோகம் தருபவள்
நீ தானோ பெண்ணே?
நெற்றிச் சுடரென, நிலவைக் கோர்தவள்
நீயானாய் தானடி

ஒற்றைப் பூவின், பிரம்மாண்டக் காடாய்
நீயானாய் பெண்ணே
அற்றை நாளில், அமுதம் வார்த்தவள்
நீயோ தானடி?

அருகினில் வருதே
உயிரினை சுடுதே
தோழி உன் நினைவடி
தனிமையை தொலைந்தேன்
நிலவினில் தொலைந்தேன்
நீயே உறவடி

காதல் எந்தன் விழிகள் ஆகி
அழகே உன்னைப் பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னைச் சேர்க்குதடி
அட காற்று என்னும் குதிரை ஏறி
இதயம் மாயம் ஆகுதடி
அடி ஆசையில்
உன்னை திருடிச் செல்ல
களவும் நியாயம் ஆகுமடி

ஹே காதல் எந்தன் விழிகள் ஆகி
அழகே உன்னைப் பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னைச் சேர்க்குதடி



Credits
Writer(s): Ghibran, Uma Devi
Lyrics powered by www.musixmatch.com

Link