Kadhalaada - Reprise

காதலாட காதலாட காத்திருந்தேனே
ஆசை நூலில் பாசம் பூக்கள் கோர்த்திருந்தேனே

செய்யாத மாதவம் நீயே
பொய்யாத பேரருள் நீயே
ஓயாத தேன்மழை அதை ஏந்தவே
புது பூமி செய்வோமே

உன்னோடு வாழ்வது ஆனந்தமே
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே

தாய் என்னும் தங்க தெய்வம் மாறாத அன்பின் வதனம்
பாராலும் பெண்மைக்குள்ளே தாய் என்ற உண்மை மலரும்
நீங்காத நேசம் தன்னை தூங்காத தாய்மை தழுகும்
சேய் ஏந்தும் தொட்டில் ஆகி தாய் கொண்ட தியாகம் வளரும்

உன்னோடு உன்னோடு வாழ்வது
உன்னோடு வாழ்வது ஆனந்தமே

Credits
Writer(s): Anirudh Ravichander, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link