Chinna Chinna Kiliye

சின்ன சின்னக் கிளியே
பஞ்சவர்ணக் கிளியே
சின்ன சின்னக் கிளியே
பஞ்சவர்ணக் கிளியே

பால் சொட்டும் நட்சத்திரம் பார்த்தாயா?
தேன் முட்டும் முல்லை மொட்டு பார்த்தாயா?
களவாடும் மின்னல் ஒன்றைப் பார்த்தாயா?
கண் கொத்தும் பறவை ஒன்றைப் பார்த்தாயா?

கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்னக் கிளியே பஞ்சவர்ணக் கிளியே

நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூரிலா?
உலா உலா வா வெண்ணிலா
கண்வாழ்வது கண்ணீரிலா

பாதை கொண்ட மண்ணே அவளின் பாதச் சுவடு பார்த்தாயா?
தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவைப் பார்த்தாயா?
ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையைப் பார்த்தாயா?
ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலைப் பார்த்தாயா?

கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன்காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்னக் கிளியே பஞ்சவர்ண கிளியே

எங்கே? எங்கே? விண்மீன் எங்கே?
பகல் வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம் என்று
அடி வானிலே நானேறினேன்

கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பார்த்தாயா?
உள்ளாடும் காற்றே அவளின் உள்ளம் சென்று பார்த்தாயா?
தூறல் போடும் துளியே உயிரைத் தொட்டுப் போனவள் பார்த்தாயா?
பஞ்சு போல நெஞ்சைத் தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா?

கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு

சின்ன சின்னக் கிளியே
பஞ்சவர்ணக் கிளியே
பால் சொட்டும் நட்சத்திரம் பார்த்தாயா?
தேன் முட்டும் முல்லை மொட்டு பார்த்தாயா?
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா?
கண் கொத்தும் பறவை ஒன்றை பார்த்தாயா?

கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்னக் கிளியே பஞ்சவர்ணக் கிளியே



Credits
Writer(s): Deva, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link