Thoondil Meen - From "Kabali"

தூண்டில் மீனுக்கு
தூக்கம் ஏதடி?
வாடும் பூவுக்கு
வாசம் ஏதடா?

விழியால் பார்த்ததால்
விதையோ பூச்செடி

ஒரு துளி மழையிலே
உயிர் குளம் நிறையுதே
ஒரு வழி பயணத்தில்
விடியலும் தெரியுதே

வானம் பார்த்தேன்
அழகிய விண்மீன்
என் போல் தூர
பாறை நெஞ்சம் கரைகிறதே

கரை தேடும் படகாக
கடல் மீது மிதந்தேனே
கரை சேர கடல் யாவும் குடித்தேனே
உனதுயிர் உடலோடு
எனதுயிர் கலந்தேனே
அழகிய முகம் பார்க்க
மெழுகென கரைந்தேனே

வானம் பார்த்தேன்
அழகிய விண்மீன்
என் மேல் தூர
பாறை நெஞ்சம் கரைகிறதே

விதை தேடும் நிலம் போல
மடி தேடி அலைந்தேனே
மடி மீது குடியேற அழைத்தேனே

பகலினில் நிலவை போல்
உனக்குள் மறைந்தேனே
பௌர்ணமி வரும் இந்நாள்
இரவிலும் பகலானேன்

தூரம் போன நிலவினை
தோளில் தாங்கும் நேரம்
தூக்கம் கண்ணில் தொலைந்ததடா



Credits
Writer(s): Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link