Sengathire

செங்கதிரே செங்கதிரே
தலை தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு காலாலே

செங்கதிரே செங்கதிரே
தலை தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு காலாலே

உயிர் வேதனை தரும் வார்த்தையை
உறவே நீ பேசுவதோ
குயில் வீட்டையே குடை சாய்த்திட
புயல் காற்று வீசுவதோ
விதியின் ஆட்டம் ஓயாதே
எதுவும் விளையாட்டே வாடாதே

செங்கதிரே செங்கதிரே
தலை தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு காலாலே

அன்னை மடி மீது தூங்கையிலே
தொல்லைகளும் ஏதடா
தந்தை நம்மை தாங்கும் வேளையிலே
கைகளிலே வானடா

தெரு மண்ணோடு நாம் நடந்தாலுமே
அழுக்கில்லாமலே இருந்தோமடா
நிலை கண்ணாடியில் சிறு கீறல் போல்
பல துண்டாயின்று உடைந்தோம்டா
வயதாகும்போதுநாமே
வழி மாறி போகிறோமே

செங்கதிரே செங்கதிரே
தலை தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு காலாலே

மொட்டு விடும் பூவை காட்டுவது
எப்பொழுதும் வாசமே
உள்ளவரை வாழ தேவையெது
உண்மையிலே பாசமே

எதை சொன்னாலுமே தவறாகவே
பொருள் கொள்வோரிடம் நலமேதடா
உறவில்லாமலே ஒரு ஜீவனும்
உயிர் வாழாதென உணர்வோமாட
வயலோடு வாழ நாமே
வரப்பாக மருவோமே

செங்கதிரே செங்கதிரே
தலை தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு காலாலே



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link