Un Kadhal Irundhal Podhum (From "Kavalai Vendam") - Reprise

என்ன தேடி வந்து நெஞ்சில் தாவுற
உன்னால் நேரம் நின்னு போச்சே
உன்னோட அணைப்பால ஒன்னும் தோணல
கொஞ்சம் தல சுத்திப் போச்சே

ஒரு பார்வையிலே
உயிர் போனதடா உன்கூடதான்
விட்டுப்போகாதே
நான் வாழ்ந்திட

உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால் போதும் ஓ போதும் போதும்

என் கால் ரெண்டும் வழித்தேட உன் வாசல் வந்தேன்
அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன்
வேஷம் போட வேண்டாம்
என்று என் நெஞ்சம் தான் சொல்கின்றதே

என் ஆகாயம் பூலோகம் எல்லாமே நீதான்
உன் மூச்சோடு மூச்சாக நான் சேரவா
வெள்ளை காகிதம் நான்
காவியம் ஆனேனோ உனைப் பார்த்ததால்

நான் என்னிடம் தோற்கிறேன்
தீயென தெரிந்தும் கேட்கிறேன்
கண் விழித்திடப் பார்க்கிறேன்
நான் தீராத கனவொன்றில் தான் தொலைகிறேன்

உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால் போதும் ஓ போதும் போதும்



Credits
Writer(s): Leon James, Ko Sesha
Lyrics powered by www.musixmatch.com

Link