Dhooramaai

தூரமாய் சிறு ஒலி தோனுதே
சிறு குயில் கூவுதே சிற்று உயிரே
சூழ்நிலை மனநிலை மாற்றுதே
உடல் நிலை தேற்றுதே குற்றுயிரே...
திசைகளை நீ மறந்து விடு
பயணங்களை ஒஹ்... தொடர்ந்து விடு...
சாலை காட்டில் தொலையலாம்
காலை ஊன்றி எட்டு வை
சாலை வந்து சேருவாய் ...
தூரமாய் சிறு ஒலி தோனுதே
சிறு குயில் கூவுதே சிற்றுயிரே

கொள்ளை அழகு தீராது
குருவி இங்கு சாகாது
வெள்ளை பூக்கள் வாடாது
வெயில் சூடு நேராது
இங்கேய தோன்றும் சிறிய மலை
இயறக்கை தாயின் பெரிய மனம்
பருகும் நீரில் பாலின் சுவை
பரிவோடு உறவாடு...
குழலோடு போன சிறு காற்று
இசையாக மாறி வெளியேறும்
உன் மீது மட்டும் மழை
கொட்டி மேகம் களைந்து ஓடுமே
பெரு துன்பம் பழகி போனாலே
சிறு துன்பம் ஏதும் நேராது
தண்ணீரில் வாழும் மீனுக்கு ஏது குளிர்காலமே...
திசைகளை நீ மறந்து விடு
பயணங்களை ஒஹ்... தொடர்ந்து விடு...

பிரையும் மெல்ல நிலவு ஆகும்
குறையும் உந்தன் அழகு ஆகும்
வளையும் மாறி வயல் பாயும்
வரமே ஓடிவா...
சலவை செயுத பூங்காற்று
தாய் பால் போன்ற நீர் ஊற்று
சாரல் மொழியில் பாராட்டு
வேற என்ன வேண்டுமோ...
மொழியற்ற பூமி இதுவாகும்
முக பாவம் மொழியாகும்
மலர் பூத இதழில் நகைப்பூத்து
என்னை மகிழ்வூட்ட வா...
பனி மூட்டம் மூடி போனாலும்
நதி ஓட்டம் நின்று போகாது
விதி மூடும் வாழ்வு விடை
தேடி தேடி நடை போடா வா...



Credits
Writer(s): R Vairamuthu, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link