Setthu Pocchu Manasu

செத்து போச்சு மனசு...
செவிடு ஆச்சு பூமி...
குருடாச்சு சாமி...
யாரை நானும் கேட்பேன் இந்த பூமி பந்துல...
என்ன விட்டு போன நீயும் எங்க தெரியல...

செத்து போச்சு மனசு...
இருள் இங்க ஆச்சு...
நிலா எங்க போச்சு...
யாரை நானும் கேட்பேன்
அட விதியே சொல்லிடு...
மரம் ஆன செடியை தோளில் எப்படி சுமப்பது...

செத்து போச்சு மனசு...
செத்து போச்சு மனசு...

அட நின்னு உறங்க கூடத்தான்,
இந்த மண்ணில் இடமில்ல... மரக்கிளையில் தங்க போனாலும்,
அட பறவையும் அங்க விடவில்ல...

செத்து போச்சு மனசு...
செத்து போச்சு மனசு...

காக்கா குஞ்சு போல நானும் கரையாத காலம் இல்ல...
மரத்து கீழ நிக்கும் நீயும் நிமிந்து கூட பார்க்கவில்ல...
முடியாது என்றானப் போதும்... நான் முயன்று தான் தோற்கிறேன்...
விடியாது என்று ஆன போதும் ... நான் கிழக்கையே பார்க்கிறேன்...
இயற்கையின் தீர்ப்பில் நானே குற்றவாளியா...
அதை திருத்தி எழுத தானே யாரும் இல்லையா...

செத்து போச்சு மனசு...
செத்து போச்சு மனசு...

என்ன போல ஜீவன் எல்லாம் ஒதுங்கி கொள்ள இடமும் இல்ல.
உண்ண விட வாழ்வில் இங்கு எனக்குன்னு யாரும் இல்ல...
என் மீதினில் மோதும் காத்து...
என் மீதினில் மோதும் காத்து...
அது பாவத்தின் மீளமே...
உன் மீதினில் சாயும் போது, என் சாபங்கள் தீருமே...
குடைகளை கண்டு மழையும், வானில் நிற்காதே...
தடைகளை கண்டு வாழ்க்கை, பாதியில் முடியாதே...

மெல்ல துடிக்கும் மனசு...



Credits
Writer(s): Karunakaran, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link