Anbulla Kadhala

அன்புள்ள காதலா
என் உயிர் காதலா
உன் முகம் காணவே காத்திருந்தேன்

நீ வரும் வரையிலே
என் மன திரையிலே
உன் விழி ஓவியம் வரைந்திருந்தேன்

இமைத்திடும் அதிர்விலே
இதயத்தின் நடுவிலே
அலைகளை எழுப்பி இவளின் கனவை நனைக்கிறாய்

விழித்திடும் நொடியிலே
இதழ்களின் படியிலே
விரல்நுனி கொண்டு நீ ஏறிவருகிறாய்
மாயனே காதலில் இப்படிக்கு
இப்படிக்கு காதலி

அன்புள்ள காதலா
என் உயிர் காதலா
உன் முகம் காணவே காத்திருந்தேன்

நதிகளின் கால் கொண்டு நடந்திட வா என்றாய்
கிளிகளின் மொழி கொண்டு
காதல் கீச்சல் அழைக்கிறாய்

மலையென தோள் கண்டு
அருவியை போல் ஆனாய்
தலை முதல் பாதம் பாய்ந்து
மொத்தமாக நனைக்கிறாய்

தனிமையின் தவறுகளை
திருத்திட பிறத்தவனே
நிமிடத்தின் குறைகுடத்தை
நிறைக்க வந்தவனே

இதயத்தின் செயல் திறனை
அறிந்திடசெய்தவளே
ஆழ்மனம் சென்று என்னை ஆழ வந்தவளே
மாயனே காதலில்
இப்படிக்கு காதலி

அன்புள்ள காதலா
என் உயிர் காதலா
உன் முகம் காணவே காத்திருந்தேன்

நீ வரும் வரையிலே
என் மன திரையிலே
உன் விழி ஓவியம் வரைந்திருந்தேன்

இமைத்திடும் அதிர்விலே
இதயத்தின் நடுவிலே
அலைகளை எழுப்பி
இவளின் கனவை நனைக்கிறாய்

விழித்திடும் நொடியிலே
இதழ்களின் படியிலே
விரல் நுனி கொண்டு
நீ ஏறி வருகிறாய்
மாயனே காதலில் இப்படிக்கு காதலி



Credits
Writer(s): N.r. Raghunanthan, Madhan Karky
Lyrics powered by www.musixmatch.com

Link