Koodi Koodiyai

ஆண்: கோடி கோடியாய் எத்தனை இன்பம் கொட்டி கிடக்குது யாவும் இன்பம்
புல்லின் தலை மீது வைரம் சூட்டும் பனியின் துளி கூட பேர் இன்பம்
பெண்: தீண்டும் காலிடம் கதைகள் பேச தாண்டி வருகின்ற நதி இன்பம்
நீண்ட பிடி கொண்ட கொடைகள் நீட்டும் மரங்கள் போல இங்கு எது இன்பம்
ஆண்: நேற்றிலே வாழ்வது என்றும் பெரும் துன்பமே
அடி இந்த நாள் போதுமே வாழ்க்கை பேர் இன்பமே
பெண்: வாழ்க்கை கொண்டாட்டம் தானே வா வாழ்ந்து பார்ப்போமே நாமே
ஆண்: கோடி கோடியாய் எத்தனை இன்பம் கொட்டி கிடக்குது யாவும் இன்பம்
புல்லின் தலை மீது வைரம் சூட்டும் பனியின் துளி கூட பேர் இன்பம்
பெண்: அன்பின் விழி கொண்டு பார்க்கையிலே ஒரு குப்பைதொட்டியும் அழகாகும்
முட்டையோடு அது உடைந்த பின்னே ஒரு குட்டி செடிக்கு அது உரமாகவும்
பெண்: யாதும் ஊரு என்று சொன்னவரின் வழி தோன்ற எங்களின் வரமாகும்
பூமி முழுவதும் உண்மையிலே நாம் அன்பை விதைத்தால் நலமாகும்
ஆண்: மலையில் நீ ஏற வழியில் வலைவெல்லாம் கொஞ்சம் பயம்
காட்டுமே வா துணிந்து நீ செல்ல பாதை எல்லாமே வண்ண பூ மீட்டுமே
பெண்: வாழ்க்கையே கொண்டாட்டமே நதி போகும் நீரோட்டமே
ஆண்: கோடி கோடியாய் எத்தனை இன்பம் கொட்டி கிடக்குது யாவும் இன்பம்
புல்லின் தலை மீது வைரம் சூட்டும் பனியின் துளி கூட பேர் இன்பம்
பெண்: எந்த ஊரு என்று கேட்டுவிட்டு அட எந்த பறவையும் பறப்பதில்லை
எந்த கடலுக்கு சேரும் என்று மழை நினைத்து மண்ணில் வந்து குதிப்பதில்லை
பெண்: நேற்று
காயம் அதை நினைத்து கொண்டு கதிர் நாளை விண்ணில் வர மறுப்பதில்லை
வீட்டை தாண்டி வந்த வழி போக்கன் தன் கூட்டின் வெறுமைகளை நினைப்பதில்லை
ஆண்: கிழக்கு அது என்னமேற்கு அது என்ன திசைகள் நமதாகுமே
வா இன்பம் அது என்ன துன்பம் அது என்ன யாவும் ஒன்றாகுமே
பெண்: வாழ்க்கையே கொண்டாட்டமே நதி போகும் நீரோட்டமே
ஆண்: கோடி கோடியாய் எத்தனை இன்பம் கொட்டி கிடக்குது யாவும் இன்பம்
புல்லின் தலை மீது வைரம் சூட்டும்
பனியின் துளி கூட பேர் இன்பம்

Credits
Writer(s): Na. Muthukumar, N.r. Raghunanthan
Lyrics powered by www.musixmatch.com

Link