Kaaranam Indri

காரணம் இன்றி கண்ணீர் வரும்
காரணம் இன்றி கண்ணீர் வரும்
உன் கருணை விழிகள் கண்டால்-அ-அ-ஆல்
காரணம் இன்றி கண்ணீர் வரும்
உன் கருணை விழிகள் கண்டால்-அ-அ-ஆல்

கருக்குழி வழிதனை அடைக்கும் விழி
கருவினில் திரு வந்து நிறைந்த விழி
இருவிழி தரும் மொழி
திறந்திடும் அருள் வழி

காரணம் இன்றி கண்ணீர் வரும்
உன் கருணை விழிகள் கண்டால்-அ-அ-ஆல்
காரணம் இன்றி கண்ணீர் வரும்

பிதற்றிடும் மொழி என் பிள்ளை மொழி
தினம் அரற்றுதல் தவிர வேறில்லை வழி
பிதற்றிடும் மொழி என் பிள்ளை மொழி
தினம் அரற்றுதல் தவிர வேறில்லை வழி
அருந்தவச் சுடரே அருள்நிறைக் கடலே
அடியவர் கிறங்கி வந்தணைத்திடும் அருளே

தொழுதேன் தொழுதேன் விழி திறப்பாய்
பிழைகள் பொறுத்தே பழி எரிப்பாய்
இருவிழி தரும் மொழி
திறந்திடும் அருள் வழி

காரணம் இன்றி கண்ணீர் வரும்
உன் கருணை விழிகள் கண்டால்-அ-அ-ஆல்
காரணம் இன்றி கண்ணீர் வரும்

பொருள் வழி செல்லும் மன வழி அடைப்பாய்
நல்ல அருள்வழி தரும் பெரும் துயர் துடைப்பாய்
பொருள் வழி செல்லும் மன வழி அடைப்பாய்
நல்ல அருள் வழி தரும் பெரும் துயர் துடைப்பாய்
எழில் ஞாயிறு போல்
அருள் ஞாயிறு நீ
ஒளிதனை பொழிந்திடும் கருணாநிதி நீ

தொழுதேன் தொழுதேன் விழி திறப்பாய்
பிழைகள் பொறுத்தே பழி எரிப்பாய்
இருவிழி தரும் மொழி
திறந்திடும் அருள் வழி

காரணம் இன்றி கண்ணீர் வரும்
உன் கருணை விழிகள் கண்டால்-அ-அ-ஆல்

கருக்குழி வழிதனை அடைக்கும் விழி
கருவினில் திரு வந்து நிறைந்த விழி
இருவிழி தரும் மொழி
திறந்திடும் அருள் வழி

காரணம் இன்றி கண்ணீர் வரும்
உன் கருணை விழிகள் கண்டால்-அ-அ-ஆல்
காரணம் இன்றி கண்ணீர் வரும்



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link