Aruna Malai Guru Ramana

அருணமலை குரு ரமணா
கருணை அருள் விழி வதனா
அருணமலை குரு ரமணா
கருணை அருள் விழி வதனா

மனது ஒன்று இருக்கிறதே
எனது என்று தவிக்கிறதே
மனது ஒன்று இருக்கிறதே
எனது என்று தவிக்கிறதே
எனது மனம் அழிந்திடவே
அருள்புரிவாய் அருள்புரிவாய்

அருணமலை குரு ரமணா
கருணை அருள் விழி வதனா
அருணமலை குரு ரமணா
கருணை அருள் விழி வதனா

தனித்திருக்கும் தாகம் கொண்டேன்
தயவும் உனக்கு இல்லையோ?
பனித்த விழி நீரும் எந்தன்
நிலையை கூறவில்லையோ?
இனியும் காலம் தாழ்த்தாமல்
கனிவாம் பார்வை தரவேண்டும்
பெரிதாம் பிறவி நோய் தீர்த்து
இனி பிறவா வரமும் பெறவேண்டும்

அந்தம் கடந்த ஆதியே
உனைச் சொந்தம் என்று பாடினேன்
அச்சம் தோற்றும் பூமியில்
வினை மிச்சம் தொலைய நாடினேன்
கோடி கோடி அடியவரில்
நான் தான் கடைக்கோடி அய்யா

அருணமலை குரு ரமணா
கருணை அருள் விழி வதனா

மனது ஒன்று இருக்கிறதே
எனது என்று தவிக்கிறதே
எனது மனம் அழிந்திடவே
அருள்புரிவாய் அருள்புரிவாய்

அருணமலை குரு ரமணா
கருணை அருள் விழி வதனா
அருணமலை குரு ரமணா
கருணை அருள் விழி வதனா

உன் பெயரை ஓதும் யாரும்
உயர்ந்த ஓர் பிறவியே
தம் துயரை தீர்க்க எமக்கு
கிடைத்த ஓர் கருவியே
உன்னை தொழுதல் பெரும் பேறு
செய்வேன் என்ன கைமாறு
அய்யன் அருளை பெருமாறு
செய்தாய் அது என் அருட்பேறு

உன் கடனை தீர்க்கும் வழி ஒன்றும்
நான் காணா நிலையும் ஆகுமோ?
என் உடலை தீப திரியாக்கி
அதை எரித்தால் கூட போதுமோ?
என் பிதற்றல் பிள்ளை மொழி அல்ல
ரமணன் விளக்கின் ஒளியன்றோ

அருணமலை குரு ரமணா
கருணை அருள் விழி வதனா
அருணமலை குரு ரமணா
கருணை அருள் விழி வதனா

மனது ஒன்று இருக்கிறதே
எனது என்று தவிக்கிறதே
எனது மனம் அழிந்திடவே
அருள்புரிவாய் அருள்புரிவாய்

அருணமலை குரு ரமணா
கருணை அருள் விழி வதனா
அருணமலை குரு ரமணா
கருணை அருள் விழி வதனா



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link