Irul Konda Vaanil

இருள்கொண்ட வானில்
இவள் தீப ஒளி
இவள் மடிக் கூட்டில்
முளைக்கும் பாகுபலி

கடையும்
இந்தப் பாற்கடலில்
நஞ்சார்?
அமுதார்?
மொழி

வான்விட்டு மகிழ்மதி ஆண்டிடவே
வந்தச் சூரியன் பாகுபலி
வாகைகள் மகுடங்கள் சூடிடுவான்
எங்கள் நாயகன் பாகுபலி

கடையும்
இந்தப் பாற்கடலில்
நஞ்சார்?
அமுதார்?
மொழி

அம்பென்றும் குறி
மாறியதில்லை
வாளென்றும் பசி
ஆறியதில்லை
முடிவென்றும் பின்
வாங்கியதில்லை
தானே
சேனை
ஆவான்

தாயே
இவன் தெய்வம் என்பான்
தமையன்
தன் தோழன் என்பான்
ஊரே
தன் சொந்தம் என்பான்
தானே
தேசம்
ஆவான்

சாசனம் எது?
சிவகாமி சொல் அது
விழி ஒன்றில் இத் தேசம்
விழி ஒன்றில் பாசம் கொண்டே

கடையும் இந்தப் பாற்கடலில்
நஞ்சார்? அமுதார்?
மொழி



Credits
Writer(s): M. M. Keeravaani, Karky
Lyrics powered by www.musixmatch.com

Link