Oh Kathal Ennai (From "Kodi Parakkuthu")

ஓ... காதல் என்னை காதலிக்கவில்லை
ஓ... காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...

தேவி வான் சொல்லியா மேகம் வரும் நீ சொல்லியா காதல் வரும்
தேவா நான் கேட்பது காதல் வரம் நீ தந்தது கண்ணீர் வரம்
பெண் அழகு முழுதும் கற்பனை என்று உறுதி மொழிகிறேன்
என் அழகு உனது அற்பணம் என்று எழுதி விடுகிறேன்
போதும் போதும் பெண்ணே புன்னகை என்பது காதலின் பல்லவி
ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...

ஓ.ஹோ. என் வானமோ ரெண்டானது நீ சொல்லியே ஒன்றானது
ஓ.ஹோ... கள் என்பது பால் ஆனது நான் காணவே நாள் ஆனது
என் புடவை உனது கட்டளை கேட்டு இடையை மறந்தது
என் விழிகள் உனது கண்களை கண்டு இமையை மறந்தது
தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...
ஓ.காதல் உன்னை காதலித்ததம்மா
ஓ... காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
கன்னி வெண்ணிலா கையில் வந்தது
கையில் வந்ததும் காதல் வந்தது
தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...
அன்பு கிருஷ்ணா



Credits
Writer(s): Vairamuthu, Hamsalekha
Lyrics powered by www.musixmatch.com

Link