Theeranadhi

எத்தனை நாள் ஆகுமோ
எண்ணமெலாம் தாகமோ
இப்படியே இந்த நொடி நீளுமோ

தீரானதி தீரானதி
தேடல்களோ தீராதினி
இறங்கி வருகுது என் வாசல் வழி
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி

விலாசம் இல்லாமல்
விவாதம் செய்யாமல்
நானிங்கு ஏன் நின்றேன்?
கூறாய் சகி

தீரானதி தீரா நதி
தேடல்களோ தீராதினி
இறங்கி வருகுது என் வாசல் வழி

எத்தனை நாள் ஆகுமோ
எண்ணமெலாம் தாகமோ
இப்படியே இந்த நொடி நீளுமோ

அருகினில் நான் இருந்தேன்
தொலைவினில் நீ இருந்தாய்
இருக்கை மீட்டுகிறேன் எதிரில் வாராய்

யாரும் காணாத ரகசிய கோலம்
நானும் நீயும் தான் இணைத்திடும் பாலம்
தேடும் நீராய் நீரில் நான் இருந்தேன்
தொலைவில் நீ இருந்தாய்

தீரானதி தீரானதி
தேடல்களோ தீராதினி
இறங்கி வருகுது என் வாசல் வழி
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி

தனிமையின் தூரிகையால்
பணிமலர் நான் வரைந்தேன்
மறைவின் சூரியனால்
கரைந்திடல் ஆனேன்

யாரும் காணும் ஓர் கணவினில் நானும்
தீரா காலோடு நுழைந்தது ஏனொ
நாணல் போலே நீரில் நான் நனைந்து
நதியாய் மாறுகின்றேன்

தீரானதி தீரா நதி
தேடல்களோ தீராதினி
இறங்கி வருகுது என் வாசல் வழி
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி

விலாசம் இல்லாமல்
விவாதம் செய்யாமல்
நானிங்கு ஏன் நின்றேன்
கூறாய் சகி

எத்தனை நாள் ஆகுமோ
எண்ணமெலாம் தாகமோ
இப்படியே இந்த நொடி நீளுமோ

எத்தனை நாள் ஆகுமோ
எண்ணமெலாம் தாகமோ
இப்படியே இந்த நொடி நீளுமோ



Credits
Writer(s): S Thamari, Mohamaad Ghibran Ghanesh Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link