Mazhaye Mazhaye

மழையே மழையே
தூரத்திலிருந்து நனைக்காதே...
மனதில் நுழைந்து ஒவ்வொரு
அறையாய் திறக்காதே...
அலையே அலையே
அழகால் என்னைக் குடிக்காதே...
ஆசை என்னும்
புயலுக்கு உள்ளே இழுக்காதே...
இதழில் இதழால் கிறுக்காதே...
இமையைக் கனவால் நொறுக்காதே...
இத்தனை மழை தான் சட்டென அடித்தால்
சின்னஞ்சிறு இதயம் தாங்காதே...
மழையே மழையே
தூரத்திலிருந்து நனைக்காதே...
மனதில் நுழைந்து ஒவ்வொரு
அறையாய் திறக்காதே...
இதழில் இதழால் கிறுக்காதே...
இமையைக் கனவால் நொறுக்காதே...
இத்தனை மழை தான் சட்டென அடித்தால்
சின்னஞ்சிறு இதயம் தாங்காதே...
ஆண் ஒரு கரை தான்
பெண் ஒரு கரை தான்
காதல் நதியாய் நடுவினில் வந்து
இணைக்கிறதே இணைக்கிறதே...
ஆயிரம் வார்த்தை
பார்வையில் இருந்தும்
அதை விட மௌனம் பேசும் பாஷை
பிடிக்கிறதே பிடிக்கிறதே...
புதிதாய் வருதே பூ வாசம்
அடடா எனக்குள் உன் வாசம்
இது அன்பால் எழுதும் இதிகாசம்
நாம் போவது எங்கோ புது தேசம்
இனி விழியும் விரலும்
விரலும் விழியும் கதை பேசும்
மழையே மழையே
தூரத்திலிருந்து நனைக்காதே...
மனதில் நுழைந்து ஒவ்வொரு
அறையாய் திறக்காதே...
இதழில் இதழால் கிறுக்காதே...
இமையைக் கனவால் நொறுக்காதே...
இத்தனை மழை தான் சட்டென அடித்தால்...
சின்னஞ்சிறு இதயம் தாங்கா...
மேல் இமை அழைக்க
கீழ் இமை தடுக்க
இது தான் காதல் கண்ணில் நடத்தும்
கலவரமா கலவரமா
பூ இதழ் துடிக்க
வேர்வரை வெடிக்க
வெட்கம் நாணம் அச்சம் இனிமேல்
துணைவருமா துணைவருமா
மயக்கம் எதிரே வலைவீசும்
தயக்கம் உடனே தடை வீசும்
இனி தினமும் கரையில் அலைவீசும்
அந்த அலையில் மொத்தத்தில்
மனம் பேசும்
மழையே மழையே
தூரத்திலிருந்து நனைக்காதே...
மனதில் நுழைந்து ஒவ்வொரு
அறையாய் திறக்காதே...
இதழில் இதழால் கிறுக்காதே...
இமையைக் கனவால் நொறுக்காதே...
இத்தனை மழை தான் சட்டென அடித்தால்
சின்னஞ்சிறு இதயம் தாங்காதே...



Credits
Writer(s): Vijay Antony, Muthukumar N
Lyrics powered by www.musixmatch.com

Link