Mookuthi Muthazhaghu (From "Kannupada Pokuthaiya")

மூக்குத்தி முத்தழகு மூணாம் பிறை பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் வெளஞ்ச நெல்லுமணி பல்லழகு

மூக்குத்தி முத்தழகு மூணாம் பிறை பொட்டழகு(பொட்டழகு, பொட்டழகு)
பொள்ளாச்சி மண்ணில் வெளஞ்ச நெல்லுமணி பல்லழகு(பல்லழகு, பல்லழகு)

பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
வானம் விட்டு மண்ணில் வந்த நிலவல்லோ பெண்ணழகு

மருதாணி கொடி போல மவுசாக அவ நடைப்பா
ஆஹா என்ன நடையோ ஆஹா அன்ன நடையோ
மழை பெஞ்ச தரை போல பதமாக தானிருப்பா
ஆஹா என்ன அழகோ ஆஹா வண்ண மயிலோ

வலை வீசும் கண்ணழகு வளைந்தாடும் இடையழகு
கருநாக குழல் அழகு கற்கண்டு குரல் அழகு
மலையாள மலையில் மலர்ந்த மலர்க்காடு உள்ளழகு

மூக்குத்தி முத்தழகு மூணாம் பிறை பொட்டழகு(பொட்டழகு, பொட்டழகு)
பொள்ளாச்சி மண்ணில் வெளஞ்ச நெல்லுமணி பல்லழகு(பல்லழகு, பல்லழகு)

கொண்டவனே கோயில் எனும் குலமகளா அவள் இருப்பா
ஆஹா நல்ல மனசு ஆஹா தங்க மனசு
தன் முகத்த பார்ப்பதற்கும் என் முகத்தில் அவ முழிப்பா
ஆஹா ரொம்ப புதுசு அய்யாக்கேத்த பரிசு

கார்த்திகையில் வெயில் தருவா சித்திரையில் மழை தருவா
விண்மீன்கள் சேர்த்து வைத்து வீட்டில் விளக்கேற்றி வைப்பாள்
தாயை போல பாசம் சொல்லி தமிழ் பெண்ணாய் வாழ்ந்திருப்பாள்

மூக்குத்தி முத்தழகு மூணாம் பிறை பொட்டழகு(பொட்டழகு, பொட்டழகு)
பொள்ளாச்சி மண்ணில் வெளஞ்ச நெல்லுமணி பல்லழகு(பல்லழகு, பல்லழகு)

பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
வானம் விட்டு மண்ணில் வந்த நிலவல்லோ பெண்ணழகு

மூக்குத்தி முத்தழகு மூணாம் பிறை பொட்டழகு(பொட்டழகு, பொட்டழகு)
பொள்ளாச்சி மண்ணில் வெளஞ்ச நெல்லுமணி பல்லழகு(பல்லழகு, பல்லழகு)

Credits
Writer(s): S. Rajkumar
Lyrics powered by www.musixmatch.com

Link