En Gaanam

என் கானம் இன்று அரங்கேறும்
என் சோகம் இன்று வெளியேறும்
ஏழை சொன்ன கீதம்
கேட்கவில்லை யாரும்
இன்று எந்தன் ராகம்
வானம் வரை போகும்
என் கானம் இன்று அரங்கேறும்

நான் தனிமை பறவை
சிறகொன்று நீ தா

ஒரு பூஞ்சருகும் மலர்ந்திடுமே ஹோ
பாலைவனத்தின் பனிமழையே வா
கோடை வெயிலில் குடைதர வா
இனி சங்கீத மாநாடு
சந்தோஷம் என் பாடு
பாடு, தாளம் போடு

என் கானம் இன்று அரங்கேறும்

பூ இதழில் நிறங்கள்
வரைந்தது யாரோ

மனதில் உறவை விதைத்தது யாரோ
கனவின் கவிகள் சுவைப்பதோ மோகமில்லை
நினைவின் நிழல்கள் சுகம் தருமோ
இரு கண் மூடி நின்றாலும்
இமை மீது சுடுகின்ற கனவு
நெஞ்சில், துஞ்சும்

என் கானம் இன்று அரங்கேறும்
இன்று எந்தன் ராகம்
வானம் வரை போகும்

என் கானம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Sethupathi Ingur
Lyrics powered by www.musixmatch.com

Link