Vaanam Namakku

ஊரைச்சுற்றும் எங்களுக்கு
இந்த உச்சிவெயில் வெண்ணிலவு
(பப்ப பாப்பா)
பிள்ளை எங்கள் கண்களுக்கு
இந்த பட்டப்பகல் நள்ளிரவு
(பப்ப பாப்பா)
எல்லோரும் அன்பாலே
கட்டிவைத்த முல்லை
இப்போது கூடாது
பாடமென்னும் தொல்லை
எல்லோரும் அன்பாலே
கட்டிவைத்த முல்லை
இப்போது கூடாது
பாடமென்னும் தொல்லை

அணையை உடைக்கும் நதிகள் நாம்
நமக்கு எதற்கு விதிகளாம்

வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி

காற்றோடு கலக்கலாம்
கைவீசி நடக்கலாம்
ராஜா இங்கே
நாம் யார் தடுப்பது

வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி

கட்டுப்பட்டு கொட்டு பட்டு
பள்ளிக்கூடத்திலே கஷ்டப்பட்டு
(யாய யாயா)
கட்டுகளை விட்டு விட்டு
இங்கு சிட்டு போல வட்டமிட்டு
(தாரரா தாரா)

எட்டாத எட்டுக்கட்டை
மெட்டுக்கட்டி பாட
தட்டாத தாளத்தட்டை
தட்டி தட்டி போட
எட்டாத எட்டுக்கட்டை
மெட்டுக்கட்டி பாட
தட்டாத தாளத்தட்டை
தட்டி தட்டி போட

அணையை உடைக்கும் நதிகள் நாம்
நமக்கு எதற்கு விதிகளாம்

வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி

காற்றோடு கலக்கலாம்
கைவீசி நடக்கலாம்
ராஜா இங்கே
நாம் யார் தடுப்பது

வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி
ப ப பபப்பா பாப
ப ப பபப்பா பாப



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link