Kaadhal Neruppin

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

கனவுகள் பூக்கின்ற
செடி என கண்கள் மாறுது உன்னாலே
வயதிலும் மனதிலும்
விட்டு விட்டு வண்ணம் வழியுதுன்னாலே

உனது வலையாடும் அழகான கை தீண்டவே
தலையில் இலை ஒன்று விழ வேன்டுமே
குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே

உனது முத்த்தத்தில் நிறம் மாறுதே
உடலில் ஒரு சூடு நாதி பாயுதே

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

வானத்தின் மறு புறம்
பறவையாய் நீயும் நானும் போவோமே
பூமியின் அடிப் புறம்
வேர்களாய் நீண்ட தூரம் போவோமே
கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே
காதல் மொழி கேட்டு மழை ஆனதே
நூறு நூற்றாண்டு காணாத பூவாசமே
பூமி எங்கெங்கும் தான் வீசுதே
என்னுள் உன்னை உன்னுள் என்னை
காலம் செய்யும் காதல் பொம்மை

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்



Credits
Writer(s): Muthukumar Na, G V Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link