Yaaru Yaaru Indha Kizhavan

யாருக்கும் தெரியாமல் நட்டநடு ராத்திரியில்
தண்ணி அடிக்கும் தடிப்பசங்களே
பீருக்கும் பிராந்திக்கும் பட்டைக்கும ginger'க்கும்
பேயா அலைகின்ற பித்தர்களே
படித்து பேரெடுக்கும் பொன்னான வாலிபத்தை
குடித்து கெடுப்பது தான் நீதியோ நியாயமோ

யாரு யாரு இந்த கிழவன் யாரு
அட நாறு நாறு பிஞ்ச தேங்கா நாறு
ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீத்த ஆழு தானே பொதுவா பொதுவா
ஹான் ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீத்த ஆழு தானே பொதுவா பொதுவா

தம்பி தம்பி பொடி தம்பி தம்பி
அங்க அண்ணன் உண்டு உன்ன நம்பி நம்பி
வாலிபத்தில் கெட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாழ்க்கையில சொல்லி புட்டேன் வெண்கல கம்பி
வாலிபத்தில் கெட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாழ்க்கையில சொல்லி புட்டேன் வெண்கல கம்பி

உன்னாட்டம் நாடி தளராத body
என்னாட்டம் எதிலும் நீ முந்தனும்
சொன்னாலே கேழு வயசான ஆளு
பின்னாலே போயி நீ குந்தணும்

குந்திக்கிறேன் உன்னையும் குந்த வைப்பேன்
நீ இந்தக் காலம் நானும் அந்தக் காலம்
பழய சங்கதியும் உங்க அப்பன் பார்த்த சங்கதியும்
அடடட எதுக்கு எங்களுக்கு உங்களுக்கு இளமை எங்கிருக்கு
அட அவுத்துவிட்ட காளையப் போல் அலையக் கொடாது
ஒரு கவுதத கட்டி அடக்கி வைக்கும் காலம் வந்தா என்ன செய்வ

யாரு யாரு இந்த கிழவன் யாரு
ஹே அட நாரு நாரு நீங்க தேங்கா நாரு
ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீத்த ஆளு தானே பொதுவா பொதுவா

அம்மாடி பார்த்தா சரியான தாத்தா
சும்மாவும் நீங்க அலக்காதீங்க
College class'uh இல்லாமப் போனா
கண்ணாடி glass'ah தூக்காதீங்க

கல்லூரிக்கு நாங்க செல்லப் பிள்ள
Cut அடிச்சா ஒரு கேள்வி இல்ல
வளத்து விட்டவனும் உன்ன இங்க படிக்க வச்சவனும்
எத்தனையோ கனவு கண்டிருப்பான்
என்னெனவோ நினைவு கொண்டிருப்பான்
அட இளமை இப்போ இருக்கிறப்போ வெளுத்து கட்டாம
தல நரைக்கிறப்போ தடி எடுத்து நடக்கிரப்போ என்ன செய்ய

யாரு யாரு இந்த கிழவன் யாரு
அட நாரு நாரு பிஞ்ச தேங்கா நாரு
ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீத்த ஆளு தானே பொதுவா பொதுவா
ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீத்த ஆளு தானே பொதுவா பொதுவா

தம்பி தம்பி பொடி தம்பி தம்பி
இங்கே அண்ணன் உண்டு உன்ன நம்பி நம்பி
வாலிபத்தில் கெட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாழ்க்கையில சொல்லி புட்டேன் வெண்கல கம்பி
வாலிபத்தில் கெட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாழ்க்கையில சொல்லி புட்டேன் வெண்கல கம்பி

தம்பி தம்பி பொடி தம்பி தம்பி
இங்க அண்ணன் உண்டு உன்ன நம்பி நம்பி



Credits
Writer(s): Ilaiyaraaja, Kavignar Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link