Kurukku Paathaiyile

குறுக்குப் பாதையிலே
மறிச்சு வழியில் நிக்க
உறுத்தும் இளம் மனசின்
அருத்தம் தெரிஞ்சு நிக்க
கூறாம போனவளே குருவம்மா
பதில் கூறாம போனவளே குருவம்மா
அட வருத்தமென்ன வருத்தமென்ன பருவமா?
நாம வெலகி நிக்க
ரெண்டும் ரெண்டு துருவமா?

குறுக்குப் பாதையிலே
மறிச்சு வழியில் நின்னு
உறுத்தும் இளம் மனசின்
அருத்தம் தெரிஞ்சு நின்னு
கேக்காம கேட்டு நிக்கும் மருதையா
மேளம் கொட்டாம கேக்குறையே உரிமையா
ஒன்ன பாக்குறப்ப உள்ளார ஒன்னு வருதையா
நீயும் பரிசம் போட்டு
உரசி பாக்க வருவயா?

சுண்ணாம்பு வெத்தலை வச்சு (ஹொய்)
சாயப்பாக்கு சந்தனம் வச்சு (ஹொய்)
பொண்ணு பாக்க வந்த என்ன மாமாவே? (ஹொய்)
(பஞ்சாங்க ஐயரு வச்சு) ஹொய்
(பந்தலில் நாளுக் குறுச்சு) ஹொய்
(கண்ணாலம் செஞ்ச என்ன மாமாவே?) ஹொய்
கண்ணாலம் கட்டும் முன்னே (ஹொய்)
கெட்டிமேளம் கொட்டும் முன்னே (ஹொய்)
கைவிரலும் பட்டால் என்ன ஆகாதா? (ஹொய்)
(வண்ணாத்துப் பூச்சிப் போல) ஹொய்
(செம்பருத்தி பூவப் போல) ஹொய்
(முன்னழக கண்டால் நெஞ்சம் வாடாதா?)

அடி மஞ்சக் கிழங்கே, சிறு இன்பக் கிடங்கே
கட்டிக் கரும்பே, கொடி முல்லை அரும்பே

அடிப் பாக்காம போனவளே குருவம்மா
ஒரு பெண்னென வந்தது பொன்னுல பன்னிய உருவமா?

குறுக்குப் பாதையிலே
மறிச்சு வழியில் நின்னு
கேக்காம கேட்டு நிக்கும் மருதையா
ஒன்ன பாக்குறப்ப உள்ளார ஒன்னு வருதையா
நீயும் பரிசம் போட்டு
உரசி பாக்க வருவயா?

பெண்ணான பெண்ணு உறங்க (ஹொய்)
பெண்டுமணி கண்ணு உறங்க (ஹொய்)
பச்சப் புல்ல போட்டு வைப்பேன் பாய் போல (ஹொய்)
(முத்தான முத்தழகி) ஹொய்
(பச்ச மலப் பொட்டழகி) ஹொய்
(முத்தம் ஒன்னு வச்சா என்ன பூப் போலே) ஹொய்
வெட்டாம வெட்டுது கட்ணு (ஹொய்)
வெட்கம்விட்டு ஒட்டுது பொண்ணு (ஹொய்)
எனன வேணும் கண்டுபிடி மாமாவே (ஹொய்)

(நையாண்டி மேளத்த கொட்டு) ஹொய்
(கை இரண்டில் தாளத்த தட்டு) ஹொய்
(ஒன்னாட்டம் நானும் ரெடி மாமாவே) ஹொய்

அடி தொட்டுப் புடிக்க, புது மெட்டுப் படிக்க
அள்ளி அணைக்க கனிக் கிள்ளி பறிக்க

ஆத்தோரம் இடம் இருக்க வசதியா
ஒரு ஒத்தடம் வைக்க, ஒத்திக பாக்க வருவயா?

குறுக்குப் பாதையிலே
மறிச்சு வழியில் நின்னு
உறுத்தும் இளம் மனசின்
அருத்தம் தெரிஞ்சு நின்னு
கேக்காம கேட்டு நிக்கும் மருதையா
மேளம் கொட்டாம கேக்குறையே உரிமையா
ஒன்ன பாக்குறப்ப உள்ளார ஒன்னு வருதையா (ஹையோ)
நீயும் பரிசம் போட்டு
உரசி பாக்க வருவயா? (அடடடா)

குறுக்குப் பாதையிலே
மறிச்சு வழியில் நிக்க
உறுத்தும் இளம் மனசின்
அருத்தம் தெரிஞ்சு நிக்க
கூறாம போனவளே குருவம்மா
பதில் கூறாம போனவளே குருவம்மா
உனக்கு வருத்தமென்ன வருத்தமென்ன பருவமா?
நாம வெலகி நிக்க
ரெண்டும் ரெண்டு துருவமா?



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link