Paasam Vaitha Mullai

பாசம் வைத்த முல்லை ஒன்றை பறித்து போனது யார்
நேசம் வைத்தபிள்ளை ஒன்றை கவர்ந்து போனது யார்
தன்னந் தனிமையிலே
இந்த அண்ணன் தவிக்கயிலே
விட்டு பிரிந்ததென்ன
உயிர் தங்கை எனும் குயிலே
பாசம் வைத்த முல்லை ஒன்றை பறித்து போனது யார்

அன்னை தந்தை போல உன்னை வளர்த்த உள்ளம் இது
அண்ணன் தங்கை பாசம் பொங்கி வழிந்த வெள்ளம் இது
உன்னில் என்னை பார்த்திருந்தேன் அனைத்தும் கற்பனையா
உண்மை அன்பை காத்து நின்றேன் அதற்கு தண்டனையா
ஆலும் விழுதினோடு தென்றல் ஆடி கிடந்த வீடு
காலம் முறிந்த கோலம் இன்று காற்றில் கலந்த கூடு
வண்ணமணி விளக்கே
ஒளி மின்னும் மரகதமே

பாசம் வைத்த முல்லை ஒன்றை பறித்து போனது யார்
நேசம் வைத்தபிள்ளை ஒன்றை கவர்ந்து போனது யார்

இங்கே மெளனம் ஆட்சி செய்த இருவர் சென்ற வழி
எந்தன் தங்கை நீயும் சென்றால்
எனக்கு என்ன வழி
அண்ணன் கையாள் தீயை வைக்க
விதியும் வந்ததடி
அம்மா அப்பா கண்ணில் கண்ணீர் நதியும் வந்ததடி
சோலை குயிலும் வாடும்
உந்தன் பேரை எழுதி பாடும்
மாலை விலவும் ஓடும்
உன்னை பூமி முழுதும் தேடும்
அண்ணன் மனத் திரையில்
உந்தன் வண்ணம் மறைவதில்லை

பாசம் வைத்த முல்லை ஒன்றை பறித்து போனது யார்
நேசம் வைத்தபிள்ளை ஒன்றை கவர்ந்து போனது யார்
தன்னந் தனிமையிலே
இந்த அண்ணன் தவிக்கயிலே
விட்டு பிரிந்ததென்ன
உயிர் தங்கை எனும் குயிலே
பாசம் வைத்த முல்லை ஒன்றை பறித்து போனது யார்

Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link