Dhoom Dhaam

போட்டா வைகுண்டம்
போலனா அசமந்தம்
பான பசிச்சாலே உப்புக்கண்டம்
பண்டம், கொண்டோம்!
ஐத்த-ஐத்த-ஐத்த-ஐத்த
ஈசல் கூட்டமும் ஐத்த

மாமா சொல்லிக்குடுத்த மாதிரி அடிக்கனும், 90 ரூபா பந்தயம்
ஏய் நைட்டு, எடுத்து உள்ள போட்டு அடிக்க சொல்றா
பறைய கொட்டு, பறைய கொட்டு
சருவ சட்டி போட்டு கரி வெட்டு

புழுதிக் காட்டு, புலுவ போல
எலும்ப விட்டு நெழிஞ்சாட்டம் காட்டு
ஆப்புனு அடுச்சா, கெண்டக்கால் தேரு
மோட்சத்த ரசிக்க வா சிலுக்கு பாரு

இஞ்சி மரப்பா, ஓய்
தேச்ச நரம்பா
காத்த காக்க ஊரு வரம்பா
ஆத்தா வாத்தா!

தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து

தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து

தெனமும் சுடுதே பித்தத்து வெயிலு
அது போல தானே, நட்போட கொரலு
கரிக் coal நமக்கு கோலார் வயலு
அங்காளி மனசே அடிக்கும் நெழலு

கல் திட்டு குட்ட பணிக்கொடம் தானே
காத்துருந்தாங்க பெருசு
பள்ளிக்கூடம் தானே
பன்னி கொதப்பும், சேறு தரந்தான்
எங்க ஊரு வாச கொலம்
ஆத்தா வாத்தா!

தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து

தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம், அடி தூம் தாம்

கட்டோ கட்டோடு வந்த
கரு மேக தூரலம்மா
நெற்பேரும் பூசும் மஞ்சள்
செயலோடு சேருதம்மா

கொத்தோ கொத்தோடு வந்த
சிவப்பிங்கே மாருதம்மா
கருமேக தூரல் அந்த
நெருப்பெல்லாம் நீங்குதம்மா

அழுத புள்ளைக்கு தாயோட காம்பு
அனாத புள்ளைக்கு ஆட்டோட காம்பு
புளுக்க போட தவளக்கா உடம்பு
புடிக்க பாக்கும் எட்டுக்கால் பாம்பு

நடுவுல இதுக்கு கொண்டாட்டம் தானே
அவசர வெரகுள சிக்காத மீனு
அம்புலி மினுக்கா, அட ராசா கணக்கா
வாழ்ந்து பாக்க வேலி இருக்கா
ஆத்தா வாத்தா!

தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து

தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம், அடி தூம் தாம்

பலே பலே பலே
பலே பலே பலே, ஹு-கா-ஹு-ஹே

ஆத்தா வாத்தா!



Credits
Writer(s): Santhosh Narayanan, Varadaraj Chikkaballapura
Lyrics powered by www.musixmatch.com

Link