Mudher Kanave

முதற் கனவே முதற் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்

முதற் கனவே முதற் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள்
வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

முதற் கனவு முதற் கனவு
மூச்சுள்ள வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல்
சாகாது அல்லவா

முதற் கனவே முதற் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள்
வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

எங்கே எங்கே
நீ எங்கே என்று
காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி
தொலைத்து விட்டேன்

இங்கே இங்கே
நீ வருவாய் என்று
சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்த்தேன்

தொலைந்த என் கண்களை
பார்த்ததும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து
இதயத்தை எடுத்து விட்டாய்
இதயத்தை பரித்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்

முதற் கனவே முதற் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள்
வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஊடல் வேண்டாம்
ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல
உயிரிலே உயிரிலே
கலந்து விடு

கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு

நிலா வரும் நேரம்
நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வன பூக்கள் வேர்க்கும் முன்னே
வர சொல்லு தென்றலை
வர சொல்லு தென்றலை

தாமரையே தாமரையே
நீரில் ஒளியாதே
நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்

சூரியனே சூரியனே
தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
மரக்கொத்தியே மரக்கொத்தியே
மனதை கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்



Credits
Writer(s): R Vairamuthu, Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link