Yaayum Niyaayum

யாயும் ஞாயும் யாரென்றாலும் வாசம் வீசும் மலரே
வாசம் இல்லை என்றால் கூட மலர் மலரே
ஊரும் பேரும் ஏதென்றாலும் காயும் தேயும் நிலவே
யாரும் இல்லை என்றால் கூட மலர்ந்திடுமே

ஒரு காதல் வந்தால் போகாது
அது போனால் குற்றம் ஆகாது
கதை பேசிடும் சில உறவுகள்
கலைந்தோடிடும் கலர் கனவுகள்
ஆயினும் அதை அனுமதி
கரை தாண்டியும் கொஞ்சம் அனுபவி

அன்னை தந்தை வேண்டாம் என்று சொல்ல சொல்ல காதல் கொள்
அன்பில் சுக்குநூறாய் போகும் சாத்திரங்களே
சுற்றம் சூழ குற்றம் சொல்லும் தேடி தேடி காதல் கொள்
வெற்றுத் தாளும் ஆகக் கூடும் காப்பியங்களே

ஏன் இந்த வாழ்க்கை என்று யாரும் நெஞ்சம் துவண்டாள்
ஆனந்த காதல் வந்து அணைத்திடுமே
வேறேதும் தேவை இல்லை காதல் உன்னில் இருந்தால்
கல்லில் புல்லில் கூட தெய்வம் புலப்படுமே

ஒரு காதல் வந்தால் போகாது
அது போனால் குற்றம் ஆகாது
கதை பேசிடும் சில உறவுகள்
கலைந்தோடிடும் கலர் கனவுகள்
ஆயினும் அதை அனுமதி
கரை தாண்டியும் கொஞ்சம் அனுபவி



Credits
Writer(s): Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link