Thanni Karuthiruchu

முத்து முத்தா
மொட்டு விட்ட வாச முள்ள
அட தொட்டு புட்டா தோஷமில்ல வாடி புள்ள
தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க
இடம் கெடச்சுருச்சு
தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம்
கேட்டுருச்சு
மெதுவா போடுது தூறல்
அடி மேலே தெளிக்குது சாரல்
உடம்போ எனக்கு சூடா இருக்கு
சில்லுன்னுதான் நெஞ்சம்
நான் சேர்ந்துக்கவா கொஞ்சம்
மாதத்துக்கா பஞ்சம்
நீ மல்லிய பூ மஞ்சம்
ரகசிய உறவிருக்கு நமக்கு
யே கிட்ட கிட்ட வந்து கட்டிக்கடி
அட்டைய போல் சட்டுனு தான் ஒட்டிக்கடி
தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
தருசா கெடக்குது பூமி
அட இதுக்கா படைச்சான் சாமி
நான் தான் மேகம்
உனக்கேன் தாகம்
கொள்ளுதடி தாபம்
நான் கொஞ்சுவதா பாவம்
மிஞ்சுதடி மோகம்
ஹே அஞ்சுதடி தேகம்
வாலிப வயசிருக்கு
நமக்கு
ஹே கொத்து கொத்தா
காச்சிருக்கும் தென்னங்கொல்லே
கொஞ்சி நின்னா குத்தமில்ல வாடி புள்ள
தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
லேசா தொடத்தான் மயக்கம்
ஏன் ரோசாப்பூவே உனக்கும்
அதுவா அடங்கும்
அணைச்சா இளகும்
கண்டதனால் பித்தம்
நான் கொண்டதுதான் மிச்சம்
தந்திடவா முத்தம்
அடி வந்திடுமா சத்தம்
துடிக்கிற துடிப்பெதுக்கு அதுக்கு
யே காதும் காதும் வச்சது போல் வாடி புள்ள
கண்ணும் கண்ணும் பேசுறப்போ பாஷை இல்ல
தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் உறங்கிருச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு
ஒதுங்க இடம் கெடச்சுருச்சு
ஒதுங்க இடம் கெடச்சுருச்சு



Credits
Writer(s): V Aalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link