Manna Maamanna

ஓச ஓச ஓச (hey)
கேக்குதா என் பாஷ
ஓச ஓச ஓச (ஓச)
கேக்குதா என் பாஷ

எனக்குள்ளே ஒரு ஓச
தெறக்குதே புது வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என் பாஷ (பாஷ)

எனக்குள்ளே ஒரு ஓச (ஓச)
தெறக்குதே புது வாச (வாச)
நா பழசெல்லாம் தூக்கி வீச (வீச)
கேக்குதா என் பாஷ (பாஷ)

ஓச ஓச ஓச (yeah)
கேக்குதா என் பாஷ (huh)
ஓச ஓச ஓச

எனது குரல் நிறம் இடம் நிலை நிதம் தரும் ஓச
கடல் மழை கடன் திடம் அடங்கிட ஓச

யாருக்கும் கேட்காது என் காதில் ஓலம் நிக்காது
ஊரெட்டும் பாற்காது என் உள்ளம் அச்சம் ஏற்காது

கருகி நின்ற சாம்பலெங்கும்
சிறகடிக்கும் ஓச
கடந்து வந்த பாதை எங்கும்
எழுந்து நிற்கும் ஓச

நதியிலிட்ட வலைகள் யாவும்
மீனறுக்கும் ஓச
நாய் எதிர்த்து பேய் எதிர்த்து
நான் குறைக்கும் ஓச

பிசகிடாது மெல்ல காதில் வந்து
முன்னோர் பேச
இரவை தூண்டி வந்த
ஒளியை கண்டு கண்கள் கூச

அடியின் ஓச வந்து
இதயமெங்கும் வழியை பேச
வாழுமாசை
என் விண்மீனது பாதை காட்ட

ஓச ஓச ஓச
கேக்குதா என் பாஷ
ஓச ஓச ஓச
கேக்குதா என் பாஷ

இரவின் ஓச
அது பூச்சி ஓச
பகலின் ஓச
அது வெயிலின் ஓச

வானின் ஓச
அது பறவை ஓச
வாழ்வின் ஓச
அது பறையோச

ஓச ஓச ஓச ஓச (ஓச)
கேக்குதா என் பாஷ (பாஷ)
ஓச ஓச ஓச (ஓச)
கேக்குதா என் பாஷ

பழைய எண்ணம் தொலைய
புதிய வண்ணம் வரைய
எனது கண்ணெதிரில மண்ண திருட
மன்னன் விரைய

கொடிய வன்மம் அறிய
உரிய நெஞ்சம் எரிய
தகிட தத்தோம் தக தத்தோம்
தக யுத்தம் தொடர

Yeah, இருவிழி எரிகிற சிறு பொறி
வெடிபட கருநிற கரமது
கனவினை அடைந்திட
கதவுகள் திறந்திட
மறுபடி பிறந்திட

எது நடக்குது ஏன் நடக்குது
என புரியுது வழி தெரியுது
எனக்குள்ள ஒரு குரல் எழும்பிட
துணை வருவான் மாமன்னன்

ஏ மன்னா (ஏ மன்னா) மாமன்னா (மாமன்னா)
ஏ மன்னா (ஏ மன்னா) மாமன்னா (மாமன்னா)

ஏ மன்னா (ஏ மன்னா) மாமன்னா (மாமன்னா)
ஏ மன்னா (ஏ மன்னா) மாமன்னா (மாமன்னா)

எனக்குள்ளே ஒரு ஓச (ஓச)
தெறக்குதே புது வாச (வாச)
பழசெல்லாம் தூக்கி வீச (வீச)
கேக்குதா என் பாஷ

எனக்குள்ளே ஒரு ஓச
தெறக்குதே புது வாச
பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என் பாஷ



Credits
Writer(s): A R Rahman, Arivarasu Thenmozhi Kalainesan
Lyrics powered by www.musixmatch.com

Link