En Kanmani

என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

நன்னா சொன்னேள் போங்கோ

என் மன்னவன் உன் காதலன்
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை
சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ

என் கண்மணி
இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறுமில்லை கவனங்களில்

இலமா மயில்

அருகாமையில்

வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்லவில்லையோ

இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ

என் மன்னவன் உன் காதலன்
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை
சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ

என் கண்மணி

தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு

மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே

அதற்க்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே

இரு தோலிலும் மணமாலைகள்

கொண்டாடும் காலமொன்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

என் மன்னவன் உன் காதலன்
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை
சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ

என் கண்மணி



Credits
Writer(s): Ilayaraja, Kovai Balu
Lyrics powered by www.musixmatch.com

Link