Naane Endrum Raja

நானே என்றும் ராஜா
ஆனால் முள்ளில் ரோஜா
ஒன்னா ரெண்டா, எந்தன் பாதை
பெண்ணா என்னை வெல்லக் கூடும்

நானே என்றும் ராஜா
ஆனால் முள்ளில் ரோஜா
ஒன்னா ரெண்டா, எந்தன் பாதை
பெண்ணா என்னை வெல்லக் கூடும்

கண்ணைக் கட்டி
என்னைக் காட்டில் விட்டால்
அங்கே கல்லை மெத்தை ஆக்கிக்கொள்ளும் வன்மை உண்டு
சேலைக் கட்டும், இந்த பெண்ணைக் கண்டு
அஞ்சும் கோழை அல்ல பேதை அல்ல வீரம் உண்டு

கண்ணைக் கட்டி
என்னைக் காட்டில் விட்டால்
அங்கே கல்லை மெத்தை ஆக்கிக்கொள்ளும் வன்மை உண்டு
சேலைக் கட்டும், இந்த பெண்ணைக் கண்டு
அஞ்சும் கோழை அல்ல பேதை அல்ல வீரம் உண்டு

பூப்போலே கையைக் கொண்டு, போனாலே நன்மை உண்டு
பூப்போலே கையைக் கொண்டு, போனாலே நன்மை உண்டு

நானே என்றும் ராஜா
ஆனால் முள்ளில் ரோஜா
ஒன்னா ரெண்டா, எந்தன் பாதை
பெண்ணா என்னை வெல்லக் கூடும்

மண்ணைக் கொண்டு, சின்ன வீட்டைக் கட்டி
அங்கே மாடி மெத்தை கட்டிப்போடும் மாயம் என்ன
வானைக் கீறி, அந்த வைகுண்டத்தை
இந்த ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன

மண்ணைக் கொண்டு, சின்ன வீட்டைக் கட்டி
அங்கே மாடி மெத்தை கட்டிப்போடும் மாயம் என்ன
வானைக் கீறி, அந்த வைகுண்டத்தை
இந்த ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன

தள்ளாடும் பேதைப் பெண்ணே
வெள்ளாடு வேங்கை அல்ல
தள்ளாடும் பேதைப் பெண்ணே
வெள்ளாடு வேங்கை அல்ல

நானே என்றும் ராஜா
ஆனால் முள்ளில் ரோஜா
ஒன்னா ரெண்டா, எந்தன் பாதை
பெண்ணா என்னை வெல்லக் கூடும்



Credits
Writer(s): Kannadhasan, M. S. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link