Machaanai Paatheengala

என் மச்சான
மச்சான
மச்சான பார்த்தீங்களா
மலவாழை தோப்புக்குள்ளே
மச்சான பார்த்தீங்களா
மலவாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்து சொல்லு
வந்தாரா காணலியே
அவர் வந்தாரா காணலியே

வெள்ளிச்சரம் புன்னகையில்
அள்ளி வச்சேன் காணலியே
நான் அள்ளி வச்சேன் காணலியே
ஊர்கோல மேகங்களே
நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
மயிலாடும் கட்டில் தனியாக அவரை
பார்த்தான சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பார்த்தீங்களா
மலவாழை தோப்புக்குள்ளே

பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க
பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க
அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட
கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள
நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள
கஸ்துரி கலைமான்களே
அவர கண்டாக்க சொல்லுங்களேன்
ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர
பார்த்தாக்கா சொல்லுங்களேன்
என் ஏக்கத்த சொல்லுங்களேன்
மச்சான பார்த்தீங்களா
மலவாழை தோப்புக்குள்ளே

கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை
தந்தாக்கா என்ன மாட்டேன்ன சொல்வேன்
கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை
தந்தாக்கா என்ன மாட்டேன்ன சொல்வேன்
புது மஞ்சள் பூசி பொன்மேடை இட்டு
மன்னாதி மன்னன் மாப்பிளையாக
மாப்பிளையாக மாப்பிளையாக
தலைவாழை இலை போடுங்க
ஊர விருந்துக்கு வரசொல்லுங்க
தலைவாழை இலை போடுங்க
ஊர விருந்துக்கு வரசொல்லுங்க
பூப்போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம்
மனசார வாழ்த்துங்களேன்
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்
மனசார வாழ்த்துங்களேன்
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்



Credits
Writer(s): P Arunachalam, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link