Manapennin Sathiyam

காதல் கனவா
உந்தன் கரம் விடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே
தாய் வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன்
ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்
கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண்ணவன் என்பேன்
உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வான்
மழை நாளில் உன் மார்பில் கம்பளியாவேன்
மலை காற்றாய் தலை கோதி நித்திரை தருவேன்

காதல் கனவா
உந்தன் கரம் விடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே
தாய் வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம் பிள்ளைக்கு தருவேன்
காலம் மாற்றம் நேரும் போது கவனம் கொள்வேன்
கட்டில் அறையில் சமையல் அறையில் புதுமை செய்வேன் அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன்

உன் ஆண்மை நிறையும் போது உந்தன் தாய் போல் இருப்பேன் உன் கனவுகள் நிஜமாக என்னையே தருவேன்
உன் வாழில் மண்ணில் நீல என் உயிர் தருவேன்

காதல் கனவா
உந்தன் கரம் விடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே
தாய் வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது



Credits
Writer(s): A R Rahman, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link