Manamaganin Sathiyam

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்

செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்

கை பொருள் யாவையும் கரைத்தாலும் கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதமும் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

அர்த்த ஜாம திருடன் போல அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிலும் எந்தன் காதல் தீரேன்

மாத மலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தால் தாய் மடியாவேன்

சுவாசம் போல அருகில் இருந்து சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய் நெஞ்சில் சுமப்பேன்

உன் கனவுகள் நிஜமாக என்னையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
தூய்மையான என் சத்தியம் புனிதமானது



Credits
Writer(s): A R Rahman, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link