Aathadi Aathadi

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசைப் பட்டு பூத்திருக்கா வா
ஒன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப் பகலா காத்திருக்க வா
இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குறுகுறுப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகமிருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா

ஆத்தாடி
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்க வா

நீ மகுடத்தில் வைர கல்லு
நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு
உன்ன தொடவும்
விரல் படவும்
ஒரு பொருத்தம் எனக்கு ஏது

நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
என்னை அடைக்க காத்து கெடக்க
உன்ன போல ஆளு ஏது

ஆசைகல் இருந்தா கூட
மனம் மசியாது.
ஆத்துல விழுந்தா கூட
நிழல் நனையாது
உள்ளுக்குள் உள்ள கிறுக்கு
உன்ன சும்மா விடாது
ஆத்தாடி ஆத்தாடி

செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
என் ராசாத்தி ராசாத்தி

ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா

கடிகார முள்ளப் போல
என்ன கணம் தோறும் சுத்தி வாயா
என்ன தொரத்து தூள்பரத்து
இந்த அல்லிப் பூ கிள்ளி போயா
புளி மூட்ட தூக்கி பார்த்தேன்
இப்ப பூ மூட்ட தூக்க போறேன்
இளஞ் சிரிக்கி உன்ன முறுக்கி
என் அருணாக் கயிறு ஆக்க போறேன்
இடுப்புல கயிறா கெடக்க
மனம் தயங்குதையா
கழுத்துல கயிறா வந்தா
நித்தமும் சொந்தம் அய்யா
விழியால் தொட்ட அழகே
இந்த ஆச மாறாதே
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பபட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப் பகலா காத்திருக்க வா
இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குறுகுறுப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா



Credits
Writer(s): Vairamuthu, Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link